தன்வந்திரி பீடத்தில் அமாவாசை யாகமும் சனீஸ்வர ஜெயந்தி சிறப்பு ஹோமமும் நடைபெற்றது!

Share Button

வேலூர் மாவட்டம் வாலாஜாபேட்டை ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடத்தில் ஸ்தாபகர் மற்றும் பீடாதிபதி யக்ஞஸ்ரீகயிலை ஞானகுரு” டாக்டர் ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகள் ஆசிகளுடன் உலக மக்கள் நலன் காருதி இன்று 03.06.2019திங்கள்கிழமை காலை 10.00 மணி முதல் 1.00 மணி வரை ஸ்ரீ சனீஸ்வர பகவானின் ஜெயந்தியை முன்னிட்டு சிறப்பு சனி பிரீதி ஹோமமும் பீடத்தில் உள்ள காலசக்கிரத்திற்கு சிறப்பு ஆராதனைகளும் பூஜைகளும் நடைபெற்றது.

மேலும் அமாவாசையை முன்னிட்டு காலை 11.30 மணி முதல் 1.30 மணி வரை மிளகாய் வற்றல்யாகம் நடை பெற்றது.

சனி பகவானின் ஆசிர்வாதங்களை பெற்று திருமணத்தடை, உத்யோகத்தடை, ஆரோக்யத்தடை, பித்ரு தடை, கிரகத்தடை, வாஸ்துத்தடை, நவகிரகத்தடை, கர்மவினை, ஊழ்வினை தடை, எதிர்மறைத் தாக்கங்கள் விலகி வாழ்வில் முன்னேற்றங்களைப் பெற சனி ப்ரீதி ஹோமம் நடைபெற்றது.

மேலும் குடும்பத்தில் சச்சரவு நீங்கவும், தாம்பத்திய உறவில் விரிசல் அகலவும், நல்ல வேலை கிடைக்கவும், திருஷ்டிகள் நீங்கவும், நாக தோஷம், சர்ப்ப தோஷம், செய்வினைக் கோளாறுகள் நீங்கவும், பில்லி சூன்யம் போன்ற தோஷங்கள் அகலவும், திருமணம் கைகூடவும், சந்தான பிராப்தம் கிடைக்கவும், தொழில்களில் ஏற்படக் கூடிய தடைகள் அகலவும், பணப் பிரச்னை, கடன் பிரச்னை தீரவும், எதிரிகள் தொல்லை அகலவும், மரண பயம் நீங்கவும், மாங்கல்ய தோஷம் அகலவும், நல்ல தொழிலாளர்கள் கிடைத்து தொழில் நல்ல முன்னேற்றம் அடையவும் அமாவாசை மிளகாய் வற்றல் யாகம் நடைபெற்றது.

இதில் பங்கேற்ற பக்தர்களுக்கு ஹோம பிரசாதங்கள் வழங்கி சிறப்பு அன்னதானம் நடைபெற்றது.

Share Button

மேலும் செய்தி தொடர்ச்சி ...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *