தன்வந்திரி பீடத்தில் மே தினத்தை முன்னிட்டு ஸ்ரீ ராஜ ராஜேஸ்வரி ஹோமமும் மூலவர் தன்வந்திரி பெருமாளுக்கு தேன் அபிஷேகமும் நடைபெற்றது

Share Button
தன்வந்திரி பீடத்தில் மே தினத்தை முன்னிட்டு ஸ்ரீ ராஜ ராஜேஸ்வரி ஹோமமும் மூலவர் தன்வந்திரி பெருமாளுக்கு தேன் அபிஷேகமும் நடைபெற்றது.
இப்பாரத பூமியில் ஒரே மேடையில், ஒரே நேரத்தில் 16 தெய்வங்களுக்கு திருக்கல்யாண வைபவங்கள் நடைபெற்ற வேலூர் மாவாட்டம்  வாலாஜாபேட்டை அனந்தலை மதுரா கீழ்புதுபேட்டையில் அமைந்துள்ளது ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடமாகும்.
இப்பீடத்தின் ஸ்தாபகர் மற்றும், பீடாதிபதி “யக்ஞஸ்ரீ கயிலை ஞானகுரு” டாக்டர் ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகள், ஆசிகளுடன் அவ்வப்பொழுது பிரம்மாண்ட யாகங்கள் நடைபெற்று வருகிறது. அந்த வகையில் ஸ்ரீ தன்வந்திரி பீடத்தில் பிரதிஷ்டை செய்துள்ள மாமேரு மற்றும் காயத்ரி தேவியை ஆராதிக்கும் வகையில் இன்று 01.05.2019 புதன்கிழமை மே தினத்தை முன்னிட்டு காலை 10.00 மணி முதல் 12.00 மணி வரை மூலவர் ஸ்ரீ தன்வந்திரி பெருமாளுக்கு தேன் அபிஷேகமும், ஸ்ரீ ராஜ ராஜேஸ்வரி ஹோமமும், மஹாமேருவிற்கும், ஸ்ரீ காயத்ரி தேவிக்கும் சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடைபெற்றது.
இப்பூஜைகளில் ஏவல், பில்லி சூன்யங்கள் நம்மை விட்டு விலகவும், அழியா செல்வம், அந்தஸ்து, புகழ், பதவி, நோயற்ற மங்களமான குடும்ப சுகவாழ்வு கிடைக்கவும், உயர்கல்வி கிடக்கைவும் பிரார்த்தனை நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர். பங்கேற்ற பக்தர்களுக்கு ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகள் ஆசிகள் வழங்கி தேன் பிரசாதமும் ஸ்ரீ ராஜராஜேஸ்வரி ஹோம பிரசாதமும் வழங்கினார். இந்த தகவலை தன்வந்திரி குடும்பத்தினர் தெரிவித்தனர்.
Share Button

மேலும் செய்தி தொடர்ச்சி ...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *