10 மற்றும் பன்னிரண்டாம் வகுப்பில் 100% வெற்றி பெற்ற பள்ளிகளுக்கு விருதுகள் வழங்கும் விழா!
பள்ளி நிர்வாகிகள் அனைவருக்கும் இனிய வணக்கம். நடந்து முடிந்த 10 மற்றும் 12ம் வகுப்பு அரசு பொதுத் தேர்வில் நூற்றுக்கு நூறு சதவீதம் வெற்றி பெற்றுள்ள பள்ளிகளுக்கும், மாநில அளவில், மாவட்ட அளவில், பாட அளவில், பள்ளி அளவில் முதலிடம் பிடித்து நல்ல மதிப்பெண்கள் பெற்று பள்ளிக் கல்வித் துறைக்கும் தமிழக தனியார் பள்ளிகளுக்கும் பெருமை சேர்த்து இருக்கக்கூடிய அனைத்து பள்ளி நிர்வாகிகள் ஆசிரியப் பெருமக்கள் மாணவச் செல்வங்கள் அனைவருக்கும் தமிழ்நாடு நர்சரி பிரைமரி மெட்ரிகுலேஷன் மேல்நிலை மற்றும் சிபிஎஸ்இ பள்ளிகள் சங்கத்தின் சார்பில் இதயபூர்வமான வாழ்த்துக்களை பாராட்டுக்களை மகிழ்ச்சியோடு தெரிவித்துக் கொள்கின்றோம்.
சாதாரண மாணவர்களையும் சாதனை மாணவர்கள் ஆக்கி அசாத்தியமான வகைகளை சாத்தியமாக்கி வரும் பள்ளி நிர்வாகிகள் அர்ப்பணிப்பு மிக்க நல்லாசிரியர் பெருமக்களையும் பல்வேறு சாதனைகளை தொடர்ந்து பெற்று வரும் அனைத்து நல்ல மாணவர்களுக்கும் நல்வாழ்த்துக்கள்.
100% வெற்றி பெற்ற பள்ளிகளுக்கு நமது சங்கத்தின் சார்பில் மிக விரைவில் மிகப்பிரம்மாண்டமாக விழாவில் தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோஹித், தமிழகமுதல்வர் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் பள்ளி கல்வித்துறை அமைச்சர் கே .ஏ. செங்கோட்டையன் அவர்கள் கலந்து கொள்ளும் மாபெரும் விருதுகள் வழங்கும் விழாவில் விருதுகளை பெற பள்ளி நிர்வாகிகள் உங்கள் பெயர்களை உடனடியாக பதிவு செய்து கொள்ள வேண்டுமாய் அன்போடு வேண்டி அழைக்கின்றோம்.
வாழ்த்துக்களுடன்,
கே.ஆர். நந்தகுமார்,
மாநில பொதுச்செயலாளர்.
Leave a Reply