பொள்ளாச்சி பாலியல் பலாத்கார வழக்கால் தமிழகம் முழுவதும் கொந்தளிப்பான சூழல் காணப்படுகிறது. மாணவர்கள், சமூக ஆர்வலர்கள் உள்ளிட்டோர் தற்போது வரை போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில் நேற்று தமிழக அரசு வெளியிட்ட சி.பி.ஐ. விசாரணைக்கானஅரசாணையில்புகார் தந்த பெண் பெயரை குறிப்பிடப்பட்டுள்ளது. இதற்கு, திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார். அதன்படி, புகார் தந்த பெண்ணின் பெயர், கல்லூரி உள்ளிட்ட விவரங்கள் இடம்பெற்று உள்ளன. பாலியல் குற்ற வழக்கில் பாதிக்கப்பட்ட பெண் பெயரை வெளியிடக்கூடாது என்று உச்சநீதிமன்றம் ஏற்கனவே உத்தரவு வழங்கியிருந்தது.
உச்சநீதிமன்ற உத்தரவை அப்பட்டமாக மீறும் வகையில் அரசாணையில் தமிழக அரசு தகவல் தெரிவித்துள்ளது. குற்றவாளிகளை காப்பாற்ற அரசு கபடநாடகத்தை தொடர்கிறது என்று முகநூலில் ஸ்டாலின் புகார் தெரிவித்துள்ளார்.
பொள்ளாச்சி ஆபாச வீடியோ வழக்கில் கைது செய்யப்பட்ட திருநாவுக்கரசை காவலில் எடுத்து விசாரிக்க சிபிசிஐடி நீதிமன்றத்தில் மனு அளித்துள்ளனர். கைது செய்யப்பட்ட 4 பேரில் திருநாவுக்கரசை காவலில் எடுத்து விசாரிக்க கோவை தலைமை நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளனர். இந்த மனு இன்று விசாரணைக்கு வருவதால் திருநாவுக்கரசை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.
Leave a Reply