ஜார்க்கண்ட் மாநிலம் அமர்கொண்டா நிலக்கரிச் சுரங்கம், ஜிண்டால் எஃகு நிறுவனத்துக்கு முறைகேடாக ஒதுக்கப்பட்டதாக எழுந்த குற்றச்சாட்டை அடுத்து, ஜிண்டால் குழுமத் தலைவர் நவீன் ஜிண்டால் உள்ளிட்ட நான்கு பேர் மீது சி.பி.ஐ., குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தது. இந்த வழக்கில் டில்லி சி.பி.ஐ., சிறப்பு கோர்ட் நவீன் ஜிண்டால் உள்ளிட்டோருக்கு நிபந்தனை ஜாமீனை வழங்கியது.
இந்நிலையில், வரப்போகும் லோக்சபா தேர்தலில் அரியானா மாநிலம் குருக்ஷேத்ரா தொகுதியில் போட்டியிட அனுமதி வேண்டி டில்லி ஐகோர்ட்டில் நவீன் ஜிண்டால் மனு செய்திருந்தார். இதற்கு சி.பி.ஐ. தரப்பில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.மனுவை விசாரித்த சிறப்பு நீதிபதி பாரத் பிரசார், தேர்தலில் போட்டியிட அனுமதி அளித்து உத்தரவிட்டார்.
Leave a Reply