மக்களவைத் தேர்தலில் திமுக கூட்டணி கட்சிகள் பெரிய அளவில் பிரச்சாரம் நடத்தும் என திமுக தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
முன்னதாக, எம்.பி., எம்.எல்.ஏக்கள் கூட்டம் சென்னை அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்றது. அதன்பின் செய்தியாளர்களை சந்தித்த ஸ்டாலின், 40 மக்களவை தொகுதிகளிலும் திமுக கூட்டணி வெற்றி பெறும் என தெரிவித்தார். ஊராட்சி சபை மூலம் ஏற்கனவே திமுக பிரச்சாரத்தை தொடங்கிவிட்டது என தெரிவித்தார்.
இதையடுத்து 3 தொகுதிகளுக்கும் இடைத்தேர்தலை தள்ளிவைத்ததில் உள்நோக்கம் உள்ளது என அவர் கூறியுள்ளார். மேலும் 2 நாட்களில் தேர்தல் அறிக்கை வெளியிடப்படும் என அவர் தெரிவித்துள்ளார். அரவக்குறிச்சி, திருப்பரங்குன்றம், ஒட்டப்பிடாரம் தொகுதிக்கும் இடைத்தேர்தல் நடத்த வேண்டும் என திமுக வலியுறுத்தியுள்ளது.
இது தொடர்பாக சென்னையில் திமுக மாவட்ட செயலாளர் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. 3 தொகுதிக்கு மட்டும் இடைத்தேர்தல் தள்ளி வைத்ததில் உள்நோக்கம் உள்ளது என திமுக சார்பில் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.












Leave a Reply