அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் ஆட்சி தமிழகத்தில் மலர்ந்திட, இதயதெய்வம் டாக்டர் புரட்சித்தலைவி அம்மா அவர்களின் 71 ஆவது பிறந்த நாளை முன்னிட்டு விநாயகர் ஆலயம், ஐயப்பன் கோவில்களில் சிறப்பு பூஜை செய்யப்பட்டது

Share Button
கிருட்டினகிரி கிழக்கு மாவட்டம், பர்கூர் ஒன்றியத்தில் மாண்புமிகு இதயதெய்வம் டாக்டர் புரட்சித்தலைவி அம்மா அவர்களின் 71 ஆவது பிறந்த நாளை முன்னிட்டு பர்கூர் விநாயகர் ஆலயம், ஐயப்பன் கோவில் மற்றும் பாலமுருகன் ஆலயம் ஆகியவற்றில் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் ஆட்சி தமிழகத்தில் மலர்ந்திட சிறப்பு பூஜை செய்யப்பட்டது.
அதனைத்தொடர்ந்து பர்கூர் பேருந்து நிலையம் அருகில் அம்மாவின் 71 வது பிறந்த நாளினை முன்னிட்டு அம்மாவின் திருவப் படத்திற்கு மாலை அணிவித்து இனிப்புகள் வழங்கும் விழா நடைபெற்றது.
பர்கூர் ஒன்றிய கழக செயலாளர்  பழனி சரவணன் தலைமையில் நடைபெற்ற இந்த இந்த விழாவிற்கு சிறப்பு அழைப்பாளராக கலந்துக்கெண்ட கிழக்கு மாவட்ட செயலாளர் கணேஷ் குமார் அம்மாவின் திரு உருவப் படத்திற்கும் , மக்கள் திலகம் எம்.ஜி.ஆரின் திருஉருவச் சிலைக்கும் மாலைகள் அணிவித்து மரியாதை செலுத்தி அனைவருக்கும் இனிப்பு மற்றும் கேக் வழங்கினார்.
இந்த நிகழ்ச்சியின் போது  ஒன்றிய அவைத்தலைவர் கிதியோன், ஒன்றிய துணை செயலாளர்  அருணாசலம், பேரூர் கழக செயலாளர் சிவக்குமார், கிருட்டினகிரி கிழக்கு மாவட்ட தகவல் தொழில்நுட்ப பிரிவு துணை செயலாளர்  நவீன்குமார், சிறுபான்மை பிரிவு ஒன்றிய செயலாளர் பாபு, இளைஞர் அணி ஒன்றிய செயலாளர்  விநாயகமூர்த்தி, அம்மா பேரவை ஒன்றிய செயலாளர்  ஞானவேல்,   மாவட்ட இளைஞரணி பொருளாளர் சதீஷ், மாவட்ட இளைஞரணி துணை தலைவர் கிருஷ்ணன், ஷாபூதின் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
Share Button

மேலும் செய்தி தொடர்ச்சி ...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *