உலக காதலர் தினத்தினையொட்டி, கிருஷ்ணகிரி மாவட்டத்திலிருந்து தாஜ்மஹால், அவலாஞ் உள்ளிட்ட பல்வேறு வகையான ரோஜா மலர்கள் வெளி நாடுகளுக்கு ஏற்றுமதி, ஒரு கோடி ரோஜா மலர்கள் ஏற்றுமதி செய்யப்பட்டதால் விவசாயிகள் மகிழ்ச்சி.
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர், பேரிகை, பாகலூர் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் தரம் வாய்ந்த ரோஜா உள்ளிட்ட கொய்மலர்கள் அதிக அளவில் சாகுபடி செய்யப்பட்டு வருகிறது.
இந்த வகையான ரோஜா மலர்களை விவசாயிகள் பசுமைக்குடில் அமைத்து ஆண்டுதோறும் புத்தாண்டு, கிறிஸ்துமஸ் மற்றும் காதலர் தினத்தை குறி வைத்து ரோஜா மலர் சாகுபடி செய்வதில் அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர்.
அதுபோல இந்த ஆண்டும் உலக காதலர்கள் விரும்பும் வகையான சிவப்பு கலரில் உள்ள தாஜ்மஹால், அவலாஜ், வெள்ளை, மஞ்சள், ரோஸ் உள்ளிட்ட பல்வேறு வகையான ரோஜா மலர்கள் சாகுபடி செய்யப்பட்டுள்ளது.
இந்த ரோஜா மலர்களை தொழிலாளர்கள் அறுவடை செய்து தரமான ரோஜா மலர்களை தரம் பிரித்து கிருஷ்ணகிரி மாவட்டத்திலிருந்து மலேசியா, சிங்கப்பூர், அமெரிக்கா உள்ளிட்ட வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்கிறனர்.
இதுகுறித்து விவசாயிகள் கூறும்போது, ஜனவரி இறுதி வாரம் முதல் பிப்ரவரி இரண்டாம் வாரம் வரை அறுவடை வரும் வகையில், ரோஜாவை சாகுபடி செய்துள்ளோம், இந்த ஆண்டு மட்டும் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் இருந்து சுமார் ஒரு கோடி ரோஜா மலர்கள் மலேசியா, சிங்கப்பூர், அமெரிக்கா, ஆஸ்திரேலியா, தாய்லாந்து உள்ளிட்ட பல்வேறு நாடுகளுக்கு அனுப்பபடுகிறது.
இதில் உலக காதலர்கள் அதிகம் விரும்பும் சிவப்பு கலரில் உள்ள தாஜ்மஹால் ரோஜா பூ ஒன்று அதிகபட்சமாக ரூ.16 -க்கு விற்பனை செய்யப்பட்டு வருவதால், கடந்த ஆண்டைவிட இந்த ஆண்டு விலை அதிகரித்து உள்ளதாக விவசாயிகள் மகிழ்ச்சியுடன் குறிப்பிட்டனர்.
Leave a Reply