தேசிய உழவர் உழைப்பாளர் கழகம் வரும் நாடாளுமன்ற தேர்தலில் தனித்து போட்டி நிறுவனர் ஜோதிகுமார் அறிவிப்பு

Share Button

தேசிய உழவர் உழைப்பாளர் கழக தலைமை அலுவலகம் வேலூர் ஆரணி ரோட்டில் அமைந்துள்ளது. வரும் நாடாளுமன்ற தேர்தல் குறித்த மாவட்ட செயலாளர்கள் கலந்தாய்வு கூட்டம் அக்கட்சியின் தலைமை அலுவலகத்தில் நடைபெற்றது. கலந்தாய்வு கூட்டத்திற்கு அனைத்து மாவட்ட செயலாளர்களும் கலந்துகொண்டனர். தேர்தல் குறித்த நிலைப்பாட்டை  இக்கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டது.

வரும் நாடாளுமன்ற தேர்தலில் தேசிய உழவர் உழைப்பாளர் கழகம் தனித்து போட்டியிடும் என்று அக்கட்சியின் நிறுவனரும் தலைவருமான ஜெ.ஜோதிகுமார் அவர்கள் கூறினார். இந்த கலந்தாய்வு கூட்டத்தில் தலைமையேற்று பேசியபோது வரும் நாடாளுமன்ற தேர்தலில் 10 தொகுதிகளில் தேசிய உழவர் உழைப்பாளர் கழகம் தனித்து போட்டியிடும் என்றும் அறிவிப்பு வெளியிட்டார்.

போட்டியிடும் இடங்களில் அதிக ஓட்டு வாங்குவதற்கு அனைவரும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்பன உள்பட பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. தேர்தல் குறித்த களப்பணிகளை செய்திட அனைத்து மாவட்ட செயலாளர்களும் தீவிரமாக செயல்பட வேண்டுமென்று கேட்டுக்கொண்டார்.

கலந்தாய்வு கூட்டத்தில் மாநில செயலாளர் தண்டபாணி, துணை செயலாளர் அஸ்ரத்அபித், மாநில மகளிரணி தலைவர் நாச்சிசேகர், வேலூர் மத்திய மாவட்ட செயலாளர் ராஜேஷ், மேற்கு மாவட்ட செயலாளர் லோகநாதன், திருவண்ணாமலை வடக்கு மாவட்ட செயலாளர் சுதாகர், மத்திய மாவட்ட செயலாளர் மோகன்ராஜ், ஈரோடு மேற்கு மாவட்ட செயலாளர் நல்லசாமி, மற்றும் மாநில, மாவட்ட, ஒன்றிய, கழக செயலாளர்கள் பலர் கலந்து கொண்டனர்.

Share Button

மேலும் செய்தி தொடர்ச்சி ...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *