ஜாக்டோ ஜியோ அமைப்பினர் இரண்டாவது நாளாக வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ள அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் லட்சகணக்கானோர் தமிழகமெங்கும் வட்டார தலைநகரங்களில் ஆர்ப்பாட்டம் மற்றும் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
கிருட்டினகிரியில் சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஜாக்டோ ஜியோ அமைப்பினர் தங்களது கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி ஜாக்டோ ஜியோ பொறுப்பாளர்கள் நந்தகுமார், அப்பர்சாமி, மாதப்பன், நாராயணன், கோபி உள்ளிட்டோர் தலைமையில் கிருட்டினகிரி புதிய பேருந்து நிலையம் அண்ணா சிலை அருகில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்களை போலீசார் கைது செய்து தனியார் மண்டபத்தில் தங்கவைக்கப்பட்டனர்.
அரசு ஊழியர்கள் ஆசிரியர்கள் இந்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதால் அன்றாட அரசுத் துறை சார்ந்த பணிகள் முடங்கும் அபாயம் உள்ளாகியுள்ளது.
Leave a Reply