இந்து சமய அறநிலையத்துறை சார்பாக கிருஷ்ணகிரி மாவட்டம், காட்டிநாயனப்பள்ளி அருள்மிகு சுப்பிரமணிய ஆஞ்சநேயசுவாமி திருக்கோயிலில் மார்கழி இசைத் திருவிழா துவக்கம்

Share Button

தமிழ்நாடு அரசு இந்து சமய அறநிலையத்துறை சார்பாக கிருஷ்ணகிரி மாவட்டம் & நகர், காட்டினாயனப்பள்ளி அருள்மிகு சுப்பிரமணியர் ஆஞ்சநேயசுவாமி திருக்கோயிலில் மார்கழி இசைத் திருவிழா திருப்பாவை மற்றும் திருவெம்பாவை – பண்ணோடு பாடுதல் பயிற்சியானது தருமபுரி மாவட்ட இந்து சமய அறநிலையத்துறை உதவி ஆணையர் திருமதி. சி.நித்யா அவர்களின் தலைமையில் இன்று 17.12.2018 இன்று துவக்கிவைக்கப்பட்டது. இப்பயிற்சியில் ஐம்பதிற்கும் மேற்பட்ட பள்ளி மாணவ – மாணவியர்கள் கலந்து கொண்டனர்.

இப்பயிற்சியினை இசை ஆசிரியர்கள் திரு.மா.ஞானசக்தி, திருமதி. மு.திருவேணி மற்றும் திருமதி. என்.செல்வராணி ஆகியோர் கலந்து கொண்டு இசையோடு துவங்கி வைத்தனர். இந்த இசைப் பயிற்சி விழாவில், ஆய்வாளர்கள், செயல் அலுவலர்கள் மற்றும் திருக்கோயில் பணியாளர்களும் கலந்து கொண்டனர்.

இப்பயிற்சியானது தொடர்ந்து இரண்டு வாரங்களுக்கு நடைபெற உள்ளது. அரசு பள்ளி மாணவ – மாணவியர் இப்பயிற்சியில் கலந்து கொள்ள இந்து சமய அறநிலையத்துறை உதவி ஆணையர் அலுவலகத்தை (04342 – 266881 மற்றும் கிருஷ்ணகிரி ஆய்வாளர் எண். 9489221840) என்ற எண்களை தொடர்பு கொள்ளவும்.

Share Button

மேலும் செய்தி தொடர்ச்சி ...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *