கேள்வி – பதில் : 30 வயதைக் கடந்த பின்னும் ஒரு சில பெண்கள்/ஆண்கள் வாழ்க்கையில் பாலியலில் தடம் மாறுவது ஏன்? உளவியல் ரீதியான காரணங்கள் உண்டா?

Share Button

கேள்வி : 30 வயதைக் கடந்த பின்னும் ஒரு சில பெண்கள்/ஆண்கள் வாழ்க்கையில் பாலியலில் தடம் மாறுவது ஏன்? உளவியல் ரீதியான காரணங்கள் உண்டா?

 

 

 

 

 

  • எஸ். மௌலி, பெற்றோர்

பதில் : பாலியல் பற்றிய விஷயங்களைப் பற்றிப் பேசுவதும், அதனைப் பற்றி அறிந்துகொள்ள முயற்சிப்பதே ஒரு தவறான அணுகுமுறை என்பது போன்றக் கருத்துப் பழக்கவழக்கங்களால் இளவயதுவரை பாலியல் அடக்குமுறை மனோபாவம் குழந்தைகளிடம் வளர்க்கப்படுகிறது.

 

 

 

 

 

  • ஓஷோனிக்ராஜ், மனநல ஆர்வலர்

அடக்குமுறை வயது காலங்களில் ஏற்பட்ட கற்பனைகள், மற்றவர்களுக்கு தெரியாமல் ஒரு செயலைச் செய்வதில் உள்ள சிலிர்புணர்வு (thrill) ஆகியவைகள் குழந்தைகளின் மனதினில் ஆழப் பதியப்படுகிறது. குறிப்பிட்ட வயதிற்குப் பிறகு வாழ்வில் சுயமுடிவெடுக்கும் அதிகாரம், தன் தேவையைத் தானே பூர்த்தி செய்துகொள்ளும் நிலை வரும்போது முன்பு அடக்கிவைக்கப்பட்ட கற்பனைகளை நடைமுறைப்படுத்தும் சூழல் உருவாக்கப்படுகிறது.

 

நீங்கள் குறிப்பிடும் வயதில் வரக்கூடியப் பாலியல் தடம் மாற்றம் பெரும்பாலும் சிலிர்புணர்வை (thrill) அடிப்படையாகக் கொண்டே வருகிறது. உடல் இன்பத்திற்காக மட்டுமே பாலியல் தடமாற்றம் ஏற்படுவதில்லை.மற்றவர்கள் மறுக்கும் செயலை அவர்களுக்குத் தெரியாமல் வெற்றிகரமாகச் செய்யும்போது கிடைக்கும் ஒருவிதமான சிலிர்ப்புணர்வே இதனை மீண்டும் மீண்டும் செய்வதற்கு அடித்தளமாக அமைகிறது.

இதுவும் ஒருவிதமான போதை தரும் விஷயம்தான்.  அப்போதை அதிகமாகும்போது தான் என்ன செய்கிறோம் என்பதனை அறியாமல் சுற்றியுள்ளவர்களை கொலை செய்வதுவரை செல்கிறது. இதற்கான பொறுப்பு முழுவதும் தனி மனிதனை மட்டுமே சாராது. குழந்தைகளை வளர்க்கும் பெற்றோர்களுக்கும் இந்த சமூகத்தின் கருத்துக் கட்டமைப்பிற்கும் மிகப்பெரிய பொறுப்பு உள்ளது.

 

கேள்வி – பதில் தொடரும்… 

………………………………………………..

(இது பெற்றோர் – ஆசிரியர்களுக்கான வகுப்பறை)

இதை படித்துக்கொண்டிருக்கும் நீங்கள் ஆசிரியராகவோ, பெற்றோராகவோ இருந்தால் இதுபோன்று தங்களுக்கு எழும் கேள்விகளை எங்களுக்கு கீழ்கண்ட மின்னஞ்சலுக்கு அனுப்புங்கள். உங்கள் கேள்விகளுக்கு பதிலளிக்க காத்திருக்கிறார் மனநல ஆர்வலர் திருமிகு.ஓஷோனிக்ராஜ் அவர்கள். கேள்விகளை அனுப்ப : Email : puthuvaravunews@gmail.com / britosho@gmail.com

 

 

ஓஷோனிக்ராஜ்

மனநல ஆர்வலர்

Share Button

மேலும் செய்தி தொடர்ச்சி ...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *