கேள்வி – பதில் : பருவ வயதில் இருக்கும் என் மகனை எதிர்காலத்தில் தீயப் பழக்கத்திற்கு ஆளாகாமல் கொண்டு செல்வது எப்படி?
கேள்வி : பருவ வயதில் இருக்கும் என் மகனை எதிர்காலத்தில் தீயப் பழக்கத்திற்கு ஆளாகாமல் கொண்டு செல்வது எப்படி?
- டி. ஷோபனாதேவி, பெற்றோர்
பதில் : பொதுவாக புகை பிடித்தல், போதைப்பொருள் பயன்படுத்துதல், பல பெண்களிடம் தொடர்பு போன்றப்
பழக்கங்கள் மட்டுமே தீயப் பழக்கங்களாக எடுத்துக்கொள்ளப்படுகிறது. இதே நோக்கில்தான் நீங்களும் கேட்கிறீர்கள் என்று நினைக்கிறன். உங்கள் மகன் அவருடைய பதினெட்டிலிருந்து இருபது வயதுவரை மட்டுமே உங்களின் பெரும்பான்மையானக் கட்டுப்பாட்டில் இருப்பார்.
- ஓஷோனிக்ராஜ், மனநல ஆர்வலர்
மேற்சொன்ன தீயப் பழக்கங்கள் அனைத்தும் அந்த வயதிலிருந்துதான் தொடங்கும். இவ்வகையான தீய பழக்கங்கள் கிளர்ச்சிக்காக (thrill) மட்டுமே முதலில் தொடங்கப்படுகிறது. சிறு வயதிலிருந்து உங்கள் மகனின் மனதில் உங்கள் மேல் ஒரு குறிப்பட்ட மரியாதை மற்றும் பகிர்ந்து கொள்ளும் உரிமையை வழங்கியிருந்தீர்கள் என்றால் இப்பழக்கத்தை கைகொள்ளும் வயதில் உங்களின் தீய பழக்கங்கள் பற்றிய ஆலோசனையை ஒருவேளை ஏற்றுக்கொள்ளும் நிலை வரலாம். மேற்சொன்னத் தீயப் பழக்கங்கள் அனைத்தும் அப்பழக்கம் உள்ளவரின் உடல் மற்றும் மனநலத்தை மட்டுமே பாதிக்கும்.
ஆனால், வாழ்வின் போக்கு தெரியாது மற்றவர்களின் கருத்துக்கு அடிமையாவது, தன்னைப் பற்றிய புரிதல் இல்லாதது, தன் வாழ்க்கைக்குத் தேவையானவற்றைப் பற்றிய தெளிவு இல்லாதது, தன் சூழ்நிலை உணராதது, தன்னைச் சுற்றியுள்ளவர்களின் சூழ்நிலை உணராது தன்னை மட்டுமே இந்த உலகமாகக் கருதுவது, தொழிலுக்காக மட்டுமே தான் பிறந்ததுபோல் வாழ்வது, சரியாக சாப்பிடாதது, நன்றாகத் தூங்காதது, தன்னை மற்றவர்களுடன் ஒப்பிட்டு மனுளைச்சளுக்கு உள்ளாவது, மற்றவர்கள் போல் தான் ஆகவேண்டும் எனத் தாபம் கொள்வது போன்றவைகளும் தீயப் பழக்கங்கள்தான்.
இவைகளையும் களைவதற்கு தங்கள் மகனுக்கு உதவிடுங்கள். அதற்கு உங்கள் வாழ்க்கையின் போக்கு பற்றிய தெளிவு உங்களுக்கு முதலில் இருக்கவேண்டும்.
கேள்வி – பதில் தொடரும்…
………………………………………………..
(இது பெற்றோர் – ஆசிரியர்களுக்கான வகுப்பறை)
இதை படித்துக்கொண்டிருக்கும் நீங்கள் ஆசிரியராகவோ, பெற்றோராகவோ இருந்தால் இதுபோன்று தங்களுக்கு எழும் கேள்விகளை எங்களுக்கு கீழ்கண்ட மின்னஞ்சலுக்கு அனுப்புங்கள். உங்கள் கேள்விகளுக்கு பதிலளிக்க காத்திருக்கிறார் மனநல ஆர்வலர் திருமிகு.ஓஷோனிக்ராஜ் அவர்கள். கேள்விகளை அனுப்ப : Email : puthuvaravunews@gmail.com / britosho@gmail.com
திருமிகு.ஓஷோனிக்ராஜ்
மனநல ஆர்வலர்













Leave a Reply