Petta Movie ரஜினி நடிக்கும் புதிய படம் பொங்கலுக்கு வெளியீடு : பரபரக்கும் ‘பேட்ட’ டீசர்
ரஜினி நடிக்கும் புதிய படம் பொங்கலுக்கு வெளியீடு : பரபரக்கும் ‘பேட்ட’ டீசர் அனிருத் இசையில், ரஜினிகாந்த் – கார்த்திக்சுப்புராஜ் கூட்டணியில் உருவாகும் ‘பேட்ட’ படத்தின் பாடல்கள் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றுவரும் நிலையில் இன்று ரஜினிகாந்தின் பிறந்தநாளை முன்னிட்டு ‘பேட்ட’ படத்தின் டீசர் தற்போது வெளியாகியுள்ளது. ரசிகர்கள் டபுள் உற்சாகம் அடைந்துள்ளனர். விஜய் சேதுபதி, நவாஷுதின் சித்திக், த்ரிஷா, சிம்ரன், பாபி சிம்ஹா, மேகா ஆகாஷ், சசிகுமார் போன்ற நட்சத்திர பட்டாளமே இணைந்து நடித்துள்ள இப்படம் வரும் பொங்கலன்று உலகமெங்கும் வெளியாகவுள்ளது. இந்த பேட்ட திரைப்படம் ரசிகர்களிடம் பெரும் வரவேற்பை ஏற்படுத்தியுள்ளது. ரசிகர்களும் உற்சாகத்தில் இருக்கிறார்கள். பேட்ட திரைப்படத்தில் ரஜினியை ரசிகர்கள் வழக்கம்போல் எதிர்பார்க்கும் கெட்டப்பில் வருகிறார் என்ற எதிர்பார்ப்பும் இந்த பேட்ட திரைப்படம் ஏற்படுத்தியுள்ளது.
Leave a Reply