கேள்வி – பதில் : தற்போது நாம் அதிகமாக எதிர்கொள்ளும் பாலியல் அச்சுறுத்தலுக்குக் காரணம் நம் வாழ்க்கையில் ஏற்பட்ட மிகப்பெரிய உணவு பழக்கம் மாற்றம்தானா அல்லது வேறு ஏதேனும் காரணம் உள்ளதா?  சற்று விளக்கவும்?

Share Button

கேள்வி: தற்போது நாம் அதிகமாக எதிர்கொள்ளும் பாலியல் அச்சுறுத்தலுக்குக் காரணம் நம் வாழ்க்கையில் ஏற்பட்ட மிகப்பெரிய உணவு பழக்கம் மாற்றம்தானா அல்லது வேறு ஏதேனும் காரணம் உள்ளதா?  சற்று விளக்கவும்?

  • எஸ். ராஜலக்ஷ்மி,  ஆசிரியர்

பதில்:  உடலும், மனமும், உணர்வும் தனித்தனியாக இருப்பது போன்று தோன்றினாலும், ஒன்றுக்கொன்று ஆழமானத் தொடர்பு உடையன. நாம் சாப்பிடும் ஒவ்வொரு உணவிற்கும் ஒருவகையான உணர்வும் அதன் விளைவும் உண்டு. தொடர்ச்சியாக அசைவ உணவை சாப்பிடும்போது அம்மிருகங்களின் உணர்வு நம்மில் படரும் என்பதும், சீதோஷ்ண நிலைக்கு ஒவ்வாத உணவு உடல் மற்றும் மனச் சமநிலையை பாதிக்கும் என்பதும், உடல் மற்றும் மனச் சமநிலை பாதிப்பு உங்கள் ஒட்டுமொத்த உணர்வுக் கட்டமைப்பையே மாற்றும் என்பதும் யதார்த்த உண்மையாகும்.

  • ஓஷோனிக்ராஜ், மனநல ஆர்வலர்

மேலும் அடக்கப்பட்ட எண்ணங்கள் மற்றும் அதன் உணர்வுகள் ஏதோவொரு வழியினில் வெளிப்பட்டே ஆகவேண்டும் என்பது இயற்கையின் நியதி. உயிரினங்களின் அடிப்படைக் கட்டமைப்பே காமசக்திதான் என்பதை நாம் உணரவேண்டும். நம் பிறப்பே அதன் அடிப்படையில்தான் எனும்போது அதன் ஊடகத்தன்மை நம்மில் இருப்பது ஆச்சர்யமல்ல. காமம் பற்றி பேசுவது, அதன் தொடர்பான எண்ணங்களைப் பகிர்ந்துகொள்ளும் வாய்ப்பு இல்லாதது, சரியான நபர்கள் அருகில் இல்லாதது, பெற்றோரின் பக்குவமின்மை ஆகியவைகள் இதுபற்றிய எண்ணங்களை மனதினுள் அடக்கும் நிலையை பருவ வயதிலிருந்தே உருவாக்குகிறது. ஒன்றை ஆழமாகப் புரிந்துகொள்ளுங்கள். காமசக்தி ஒன்றே கோபம், அன்பு, வெறுப்பு, அக்கறை மற்றும் அனைத்து வகையான எண்ணங்கள் மற்றும் உணர்வுகளாக வெளிப்படுகிறது. புரிதல் இல்லாமல் கற்பனை செய்யப்பட்ட, அடக்கப்பட்ட எண்ணங்கள் தனது சுயக் கட்டுப்பாட்டை இழந்து, தன்னை வெளிப்படுத்துவதற்குத் தடை இல்லை எனும்போது  மிக வக்கிரமாக வெளிவருகிறது.

உணவுமுறை இதில் பெரும்பங்கு வகித்தாலும், காமம் பற்றிய அடிப்படைப் புரிதல் இல்லாததும், அதனை வெளிப்படையாகப் பேசிப் புரிந்துகொள்ளும் கட்டமைப்பு இல்லாததும், காமத்தை ஒரு தீயசக்தியாகவே உருவகப்படுத்தி வைத்திருப்பதும், அதனை போதைதரும் விஷயமாகக் கையாளுவதும், தன் அகங்காரத்திற்கு (பலவீனமானவர்களை துன்புறுத்துவது) தீனிபோடும் குறுக்குவழியாக காமத்தைத் தேர்ந்தெடுப்பதும் பாலியில் அச்சுறுத்தலுக்கு முக்கிய காரணங்களாகும்.

கேள்வி – பதில் தொடரும்… 

………………………………………………..

(இது பெற்றோர் – ஆசிரியர்களுக்கான வகுப்பறை)

இதை படித்துக்கொண்டிருக்கும் நீங்கள் ஆசிரியராகவோ, பெற்றோராகவோ இருந்தால் இதுபோன்று தங்களுக்கு எழும் கேள்விகளை எங்களுக்கு கீழ்கண்ட மின்னஞ்சலுக்கு அனுப்புங்கள். உங்கள் கேள்விகளுக்கு பதிலளிக்க காத்திருக்கிறார் மனநல ஆர்வலர் திருமிகு.ஓஷோனிக்ராஜ் அவர்கள். கேள்விகளை அனுப்ப : Email : puthuvaravunews@gmail.com / britosho@gmail.com

 

 

திருமிகு.ஓஷோனிக்ராஜ்

மனநல ஆர்வலர்

 

 

 

Share Button

மேலும் செய்தி தொடர்ச்சி ...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *