கிருஷ்ணகிரி தென்பெண்ணை ஆற்றில் இருந்து ஆண்டுத் தோறும் 50 டி.எம்.சி. தண்ணீர் வீணாக கடலில் கடப்பதை தடுத்து விவசாயிகள் பயன் பெறும் வகையில்
வாணி ஒட்டு தடுப்பணை கட்டும் திட்டத்தை தமிழக அரசு விரைத்து செயல்படுத்த வலியுறுத்தி தமிழக விவசாயிகள் சங்கத்தின் சார்பில் நடத்தப்பட்ட உண்ணாவிரதப் போராட்டத்தில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட விவசாயிகள் பங்கேற்பு.
கிருஷ்ணகிரி, தர்மபுரி ஆகிய இரு மாவட்ட மக்களின் ஜீவாதாரமாகவும் உள்ள இந்த தென்பெண்ணை ஆற்றில் இருந்து ஆண்டுத் தோறும் சுமார் 27 டி.எம்.சி.முதல் 50 டி.எம்.சி தண்ணீர் வீணாக கடலில் சென்று கலக்கிறது.
இந்த வீணாக போகும் தண்ணீரை வாணிஒட்டு என்ற இடத்தில் தடுப்பணை கட்டி என்னேகோல் கிராமத்தின் வழியாக வலது மற்றும் இடது புறக்கால்வாய்கள் அமைத்து காய்ந்து போன 200 -க்கும் மேற்பட்ட ஏரிகளுக்கு தண்ணீர் கொண்டு சென்று அந்த பகுதி விவசாய மக்கள் பயன் பெறும் வகையில் கடந்த திமுக ஆட்சியில் திட்டம் தீட்டப்பட்டு, அது கடந்த எட்டு ஆண்டுகளாக இந்த திட்டத்தை கிடப்பில் போடப்பட்டுள்ளது.
சுமார் 10 லட்சம் விவசாய பெருமக்கள் பயன் பெறும் வகையில் உள்ள,
வாணிஒட்டு தடுப்பனைத் திட்டத்தினை விரைந்து முடிக்க வலியுறுத்தி தமிழக விவசாயிகள் சங்கத்தின் சார்பில் உண்ணாவிரதப் போராட்டம் கிருஷ்ணகிரி புதிய பேருந்து நிலையம், அண்ணா சிலை அருகில் நடைபெற்றது.
இந்த உண்ணாவிரதப் போராட்டத்திற்கு தமிழக விவசாயிகள் சங்கத்தின் மாநில தலைவர் இராம கவுண்டர் உள்ளிட்ட ஆயிரத்திற்கும் மேற்பட்ட விவசாயிகள் கலந்துக் கொண்டு விவசாய மக்கள் பயன் பெறும் வாணி ஒட்டு தடுப்பணை திட்டத்தினை தமிழக அரசு விரைந்து செயல்படுத்த வலியுறுத்தி கோசங்களை எழுப்பினார்கள்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய இராம கவுண்டர், கடந்த திமுக ஆட்சியில் இந்த திட்டம் தீட்டப்பட்டு சர்வே பணிகளுக்கு நிதி ஒதுக்கப்பட்டது. கடந்த எட்டு ஆண்டுகளாக பணிகள் தொய்வடைந்துள்ளது. தொடர்ந்து சட்டமன்ற கூட்டத்தொடர்களில் குரல் கொடுத்தும் பயனில்லை. இதுவரையில் பணிகள் மேற்கொள்ளவில்லை.
இது ஒரு ஜீவாதார பிரச்சனை, வாழ்வாதார பிரச்சனை. இந்த இரு மாவட்ட மக்களின் விவசாய பிரச்சனை, காப்பாற்றப்பட வேண்டும். என்பதறகாக அனைவரும் ஒன்று சேர்ந்து வாணிஒட்டு இந்த இடத்தில் தான் அணை கட்ட வேண்டும் என்று போராடிக் கொண்டிருக்கிறோம்.
இதை இந்த அரசு செய்து கொடுக்க வேண்டும், சுமார் 10 லடசம் மக்கள் பயன் பெறும் வாணி ஒட்டு அணைத்திட்டத்தினை தமிழக அரசு விரைந்து செயல்படுத்த வேண்டும் இல்லையில் மீண்டும் போராட்டம் தொடரும் என தெரிவித்தார்.