விவசாயிகளைக் காப்பாற்றுவோம் உலகத் தமிழ்ச் சொந்தங்களுக்கு
ஓர் ஆசிரியரின் வேண்டுகோள்…
கஜா புயலால் ஏற்பட்ட பாதிப்பில் வீழ்ந்துகிடப்பது மரங்கள் அல்ல. மக்களின் வாழ்க்கை.
ஏனென்றால் அவைதான் அவர்களின் பொருளாதாரம், அவர்களின் வாழ்வாதாரமும் கூட.
கோடிக்கணக்கான மரங்களோடு சேர்ந்து மக்களுடைய வாழ்க்கையும் வீழ்ந்துகிடக்கிறது. நாம் ஒவ்வொருவரும் பிறந்தநாள் விழா, திருமணவிழா, காதணி விழா, புதுமனை புகுவிழா என எத்தனையோ விழாக்களை கொண்டாடி மகிழ்கிறோம். தயவுசெய்து வரும் இந்த ஒரு வருடம் அத்தனை கொண்டாட்டங்களிலும் செய்கின்ற செலவில் ஒருபகுதியாக விவசாயிகளுக்கு மரக்கன்றுகளை நன்கொடையாக கொடுத்து உதவ வேண்டும் எனக் கேட்டுக் கொள்கிறேன்.
மேலும் அரசு ஊழியர்கள், தனியார் நிறுவனங்கள், கார்ப்பரேட் கம்பெனிகள் என எல்லோரும் வருமானவரி குறைப்பிற்காக பல்வேறு நன்கொடைகளை அளிப்பீர்கள். இந்த ஒருவருடம் உங்களுடைய அத்தனை நன்கொடைகளும், விவசாயத்திற்காகவும், விவசாயிகளுக்காகவும் இருக்கட்டும்.
ஏனெனில் விவசாயிகள்தான் இந்த தேசத்தின் முதுகெலும்பு அவர்களை வீழ்த்திவிட்டு, நாம் எதனையும் சாதிக்க முடியாது.
எனவே நாம் ஒவ்வொருவரும் இயன்றவரை விவசாயிகளுக்கு தோள்கொடுப்போம்.
இருந்தால் செய்வேன் என்பது உதவியல்ல. இருப்பதில் செய்வோம் என்பதே உதவி..
தனியொரு மனிதனுக்கு உணவில்லை எனில் ஜகத்தினை அழிப்போம் என்றான் பாரதி. உணவிட்ட இனமே உணவுக்காக அல்லல்படுகிறது. கரம் கொடுப்போம்..துயர் துடைப்போம். நம் மக்கள் நமது கடமை.
சி.சதிஷ்குமார்
மாநில ஒருங்கிணைப்பாளர்
கல்வியாளர்கள் சங்கமம்