ஊத்தங்கரையில் உலக மனித உரிமைகள் தினம் கொண்டாட்டம் நடைபெற்றது. கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரை பகல் நேர பராமரிப்பு மையத்தில் உலக மனித உரிமைகள் தினம் கொண்டாட்டப்பட்டது.
இந்நிகழ்ச்சிக்கு பொறுப்பு மேற்பார்வையாளர் சங்கர் தலைமை தாங்கினார். தலைமை ஆசிரியர் முருகன் மற்றும் ஆண்கள் பள்ளி ஜேஆர்சி ஆசிரியர் கு.கணேசன் ஆகியோர் முன்னிலை வகித்தார்கள்.
உலக மனித உரிமைகள் தினத்தை முன்னிட்டு மாற்றுத் திறனாளி மாணவர்களுக்கு போர்வை, குல்லா போன்ற பரிசுகள் வழங்கப்பட்டன. முன்னதாக மாற்றுத் திறனாளி மாணவர்களுக்கு இனிப்புடன் கூடிய உணவு வழங்கப்பட்டது.
இந்நிகழ்ச்சியில் ரெட் கிராஸ் தலைவர் வி.தேவராசு, மருத்துவர்கள் தே.கவின், ஹேமா, மாற்றுத் திறனாளிகளின் சிறப்பு ஆசிரியர்கள் ராஜா, சுரேஷ்குமார், காமாட்சி, கவிதா, ஆசிரியர்கள், பெற்றோர்கள் மற்றும் மாற்றுத் திறனாளி மாணவர்கள் கலந்து கொண்டனர்.